நேற்று முந்தினம் எனது ரிசீவரில் புதிய அலைவரிசைகளை தேடிக்கொண்டிருக்கையில் திடீரென அகப்பட்டது ரிலையன்ஸ் டிடிஎச்-ன் சேவை.
எஸ்.எஸ் மியூசிக்குடன் பல டிடியின் அலைவரிசைகளும் ஒரு வெளிநாட்டு(பிரென்ச்) அலைவரிசையும் கிடைத்தன. ஆனால் நேற்று அவை காணாமல் போயின. வானம் மேக மூட்டமாய் இருப்பதாலோ என்னவோ.
மீண்டும் வருகிறதா எனப் பார்க்கலாம்...
Wednesday, December 19, 2007
Tuesday, December 4, 2007
புலி வந்தேவிட்டது...
ஆமாங்க ஆமாம்!
வருது வருது என நீ...ண்ட நாட்களாய் எதிர்பார்க்கப் பட்ட சன் குழுமத்தின் டிடிஎச் சேவை துவங்கியேவிட்டது. ரகளை பண்ணிக்கொண்டு தாம் மட்டும் தான் தாதாவாயிருக்க உரிமையுண்டு எனக் கூவிக்கொண்டிருந்த கேபிள்காரர்களுக்கு ஆப்பு வைத்துவிட்டு "சன் டிடிஎச்(SUN DTH)" என்கிற பெயரில் டிடி-யின் இன்சாட்(INSAT) - 4B செயற்கைக் கோள் வழி தனது சேவையைத் துவக்கியுள்ளது சன் குழுமம். ஆனால் எல்லா அலைவரிசைகளுமே காசு கொடுத்துத்தான் பார்க்க வேண்டிய வகையில் "என்கிரிப்ட்" செய்யப்பட்டுக் கிடைக்கிறது. மேலும் தற்போது உபயோகத்திலிருக்கும் டிவிபி-எஸ்(DVB-S) என்கிற அடிப்படை டிஜிடல் ஒளிபரப்புக்கு பதிலாக டிவிபி-எஸ்2(DVB-S2) எனப்படும் அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட ரிசீவரை பயன்படுத்தித்தான் நீங்கள் எந்த அலைவரிசையையும் பெறமுடியும். எனவே செட் டாப் பெட்டியை "சன்"-னிடமிருந்து தான் வாங்கியாகவேண்டும். இந்திய அரசின் டிராய்(TRAI) எனப்படும் ஒழுங்குபடுத்தும் அமைப்பின் வழிகாட்டுதல்களை எந்த டிடிஎச் சேவைதாரரும் பின்பற்றுவதில்லை என்பதை சன் டிடிஎச்-சும் நிரூபித்துள்ளது.
பி.கு: நான் முன்பு கூறியபடியே எனக்கு மேலும் ஒரு தமிழ் வானொலி கிடைத்தாயிற்று(சூரியன் FM).

Saturday, December 1, 2007
காணாமல் போன கானல்கள்!
ஐயகோ..
நேற்று என் கண் பட்டுவிட்டதா..
தூரதர்ஷன் திடீரென்று சில தனியார் ஒளிபரப்புகளை நிறுத்திவிட்டது.
பலியான அலைவரிசைகள்:
சன் நியூஸ் - நீக்கப்பட்டுவிட்டது
சன் டி.வி - நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
ஜெயா டி.வி - நீக்கப்பட்டுவிட்டது
என்ன காரணம் எனத் தெரியவில்லை.
ஒரு விசயம்: இவற்றோடு சில பழைய தனியார் அலைவரிசைகளுக்கும் இதே கதி தான்.
அவை:
கைரளி - மலையாளம்
டி.டபிள்யூ(DW) - ஆங்கிலம்,ஜெர்மானிய மொழிகளில்
ஒன்று மட்டும் தெரிகிறது.
பணம்

Friday, November 30, 2007
அதிகரிக்கும் தமிழ் ஒளிபரப்புகள்
ஹ்ம்..
ஒருவழியாக டி।டி டைரக்ட் ப்ளஸ் தனது நீண்டகால உறுதிமொழியான அலைவரிசை அதிகரிப்பில் ஈடுபட்டுள்ளது। அதன் உறுதியான குறிக்கோளற்ற இந்தச் சேவையின் மூலம் எந்த லாபமும் கிட்டாத நிலையில், தனியார் நிறுவனங்களுடன் விளம்பர வருவாயைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் பல தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் தற்போது தலைகாட்டத் துவங்கியிருக்கின்றன. அதிலும் தமிழ் அலைவரிசைகள் அதிகரித்திருப்பது நமக்கெல்லாம் நல்ல செய்தி தான். கலைஞரின் இலவச தொலைக்காட்சி பெற்றவர்களுக்கு இது மிகவும் இனிப்பான செய்தி. காசு செலவில்லாமல் 8 தமிழ் ஒளிபரப்புகள் தற்போது DD DTHஇல் உலா வருகின்றன. மேலும் தமிழ் FM அலைவரிசைகள் கிடைக்கப் பெறாத இடங்களில் வசிப்பவர்களுக்கு FM ரெயின்போ, DTH தமிழ் போன்றவை மிக்க மகிழ்வைத் தரும்(நான் வசிக்கும் பெங்களூரில் டிஜிடல் தமிழ் வானொலியை கேட்டு மகிழ்கிறேன்).
சன் நியூஸ்
சன் டிவி
ஜெயா டிவி
பொதிகை
வின் டிவி
கலைஞர் தொலைக்காட்சி
மக்கள் தொலைக்காட்சி
மெகா டிவி
ஆகிய தொலைக்காட்சிகள் தற்போது கிடைக்கின்றன. கூடிய விரைவில் "சுட்டி" போன்ற குழந்தைகளுக்கான அலைவரிசைகளுடன் சூரியன் FM கூடக் கிடைக்கும் என நினைக்கிறேன்
National Geographic போன்ற அலைவரிசைகளும் தூரதர்ஷனுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளன. 1500 ரூபாயில் ஒரு செட் டாப் பாக்ஸ் எனப்படும் ஒரு பெட்டியை இணைத்துவிட்டால் போதுமே. ஆயுளுக்கும் செலவின்றி கண்டுகளிக்க டிடி டைரக்ட் ப்ளஸ் டிடிஹெச்.

Monday, November 19, 2007
DTH என்றால் என்ன?
இது பற்றி பலபேர் எழுதிட்டாங்க!
சிந்தாநதி வலைப்பதிவை இங்கே காணலாம்.
இது பற்றி மேலும் பதிய இருக்கிறேன்.
அதுவரை...
நன்றி!
சிந்தாநதி வலைப்பதிவை இங்கே காணலாம்.
இது பற்றி மேலும் பதிய இருக்கிறேன்.
அதுவரை...
நன்றி!
Subscribe to:
Comments (Atom)